உணர்வியல் நோக்கில் நபிமார்கள் வாழ்வு


Author: மாலிக் பத்ரி தமிழில் முனைவர் பி.எம்.எம். இர்ஃபான்

Pages: 0

Year: 2023

Price:
Sale priceRs. 380.00

Description

திருக்குர்ஆன், நபிவாழ்வு போன்றவற்றின் அடிப்படையில் இஸ்லாமிய உளவியல் விஞ்ஞானத்தின் தேவை நீண்ட காலமாகவே இருந்துவந்திருக்கிறது. இஸ்லாமிய அடிப்படையில் நவீன உளவியலின் துணைகொண்டு, அதன் தேவையில்லா விசயங்களை வடிகட்டி, மனித நடத்தைகளையும் பண்புகளையும் விவரிக்க முடியுமா என்ற நீண்டகாலக் கேள்விக்கான விடையை இந்நூல் சாத்தியப்படுத்தியிருக்கிறது. எல்லோரையும்விட நபிமார்கள் ஏன் சிறப்பானவர்கள் என்பது பற்றியும், அவர்களுக்கு ஏற்படும் நல்லுணர்ச்சித் தூண்டல்கள், அவற்றுக்குரிய துலங்கல்கள், அவற்றின் பாரம்பரியத் தன்மை, சூழலியல் தூண்டல்களைப் பிரித்தறியும் தன்மை, இவற்றுக்குக் காரணமான ஆத்மீகக் கொடைகள், சூழலியல்-பாரம்பரியப் பண்புகள் போன்றவற்றையும், அவர்கள் கொண்டிருந்த விசேஷமான பரம்பரை அலகுகள்தாம் இவற்றுக்குக் காரணம் என்ற ஆத்மீக மரபணுக் கொள்கையையும் இந்நூல் முன்வைக்கிறது. இவற்றைக் கொண்டு நபி மூசா, நபி யூசுஃப் ஆகியோரின் சூழலையும் பரம்பரையையும் திட்டமிடுவதில் தொழிற்பட்ட இறைஞானம் பற்றிய அவதானங்களையும் இந்நூல் விளக்குகிறது. நபி யூசுஃப் தொடர்பான பகுதியில் வரும் கனவுகளுக்கும் மற்றைய கனவுகளுக்குமான நவீன உளவியல் விளக்கங்களும் இஸ்லாமிய விளக்கங்களும் மிகுந்த ஈர்ப்பு கொண்டவையும் வாசிப்பதற்குச் சுவையானவையும் ஆகும். -- ஏ.எம். றியாஸ் அகமட் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் (இலங்கை)

You may also like

Recently viewed