பச்சைக்கிளியே பறந்து வா


Author: கீதா மதிவாணன்

Pages: 0

Year: 2023

Price:
Sale priceRs. 100.00

Description

குழந்தைகளுக்குத் தாய்மொழியைக் கற்பிப்பதன் எளிய வழிமுறைதான் பாடல்கள். பாடுவதன் மூலமும் பாடல்களைத் தொடர்ச்சியாகக் கேட்பதன் மூலமும் மொழி வசப்படுகிறது. உச்சரிப்பு தெளிவாகிறது. புதிய வார்த்தைகள் அறிமுகமாகின்றன. நினைவாற்றல் வலுப்படுகிறது. தாய்மொழியில் தேர்ச்சி கிடைக்கிறது. அதனால்தான், அம்மா இங்கே வா வா ஆசை முத்தம் தா தா என்று ஆரம்ப எழுத்துகளைக் கூட பாடல் வழியே கற்றுத்தருகிறோம். பச்சைக் கிளியே பறந்து வா பாடம் படிக்க விரைந்து வா என்று பச்சைக் கிளியை அழைக்கும் சாக்கில் நான் இங்கே சிறுவர்களை அழைக்கிறேன். இத்தொகுப்பில் உள்ள பாடல்கள் அனைத்தும் ஐந்து முதல் பதினைந்து வயது வரையிலான எந்தக் குழந்தையையும் கவரும் என்று நம்புகிறேன். தமிழ்ப் பேசும் குழந்தைகள் அனைவருக்கும் இந்நூலைச் சமர்ப்பிக்கிறேன்.

You may also like

Recently viewed