Description
உருவில் சிறியவர்களாக இருந்தாலும் சிறார்கள் தம் எண்ணங்களால் உயர்ந்தோராயிருப்பவர்கள். தமது உயர்ந்த எண்ணத்திற்கேற்ப, தம்மால் இயன்ற நற்செயல்களில் ஈடுபடவும் முனைபவர்கள். அவர்களை ஆற்றுப்படுத்தவில்லையென்றாலும் குறை சொல்லாமல் இருந்தால்கூடப் போதும் பல நல்ல செயல்கள் நடந்தேறும். “குழந்தைகளே இது உங்கள் காலம்” நூலை வாசிப்போர் நிச்சயம் இப்படிப்பட்ட செயல்பாடுகளை ஊக்குவிப்போராகவே இருப்பர். அல்லது மாறிவிடுவர். தொடர்ந்து சிறார்களின் நற்செயல்களை உலகிற்குப் படம் பிடித்துக் காட்டும் ஜெயசீலன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
பாராட்டுகளுடனும் வாழ்த்துகளுடனும்
என். மாதவன்
மாநில துணைத் தலைவர்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்