Description
அடால்ஃப் ஹிட்லர் - எந்த ஒரு பெயரைக் கேட்டவுடனே உங்கள் மனதில் ஒரு வெறுப்பு பரவும் என்று கேட்டால், உலகம் முழுக்க அனைவரும் சொல்லும் பெயர் இதுதான். ஏன் அப்படி? கோடிக்கணக்கான மக்களைக் கொன்று குவிக்கும் வெறி எப்படி ஹிட்லருக்கு வந்தது? யூதர்களை ஏன் ஹிட்லர் வேட்டையாடினார்? உலகமே அஞ்சி நடக்கும் வதை முகாம்களை ஏன் உருவாக்கினார்? அங்கே மக்கள் எப்படி கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டார்கள்? ஹிட்லரின் இறுதி 105 நாட்களில் நடந்தது என்ன? ஹிட்லரின் ஏழ்மையான இளமைக் காலம், அவரது அரசியல் எழுச்சி, அன்றைய உலக அரசியல் நிலை, இரண்டாம் உலகப் போர் அரசியல், அதைத் தொடர்ந்து இறுதியில் ஹிட்லர் தற்கொலை செய்துகொள்வது வரையிலான ஒட்டுமொத்த வரலாற்றையும் விவரிக்கிறது இந்த நூல். ஆதாரபூர்வமாகவும் எளிமையாகவும் எழுதி இருக்கிறார் அனந்தசாய்ராம் ரங்கராஜன்.