Description
‘அக்கியானேவின் மாயக் கரங்கள்’, இந்து தமிழ் திசை இணைப்பிதழான மாயாபஜாரில், ‘குழந்தை மேதைகள்’ என்கிற தலைப்பில் தொடராக வெளிவந்தது. இளம் வாசகர்களுக்கு அவர்கள் வயதிலேயே இருக்கும் மேதைகளை அறிமுகப்படுத்துவதே இந்தத் தொடரின் நோக்கம்.
7 வயதுக்குள் 25 ஆயிரம் ஓவியங்களைத் தீட்டிய கேரளாவின் தாமஸ் க்ளிண்ட், 9 வயதில் மன்னரான துட்டன்காமன், டிவியைக் கண்டறிந்த பைலோ ஃபான்ஸ்வொர்த், நோயிலிருந்து மீண்டெழுந்த 7 வயது வயலின் மேதை சீசர் சாண்ட், 13 வயதில் எவரெஸ்ட் சிகத்தைத் தொட்ட ஜோர்டன், உலகத்தை மெளனமாக்கிய 12 வயது செவன் சுசூகி, கணித மேதை ஆர்ஃபா கரீம் போன்று 22 குழந்தை மேதைகளைத் தேடிக் கண்டுபிடித்து, சுவாரசியமாக எழுதியிருக்கிறார்.