Description
இசைக்கலைஞன் ஒருத்தனின் வாழ்வாய் விரியும் இந்த நாவலில், தனக்குக் கிடைத்த வாழ்வியல் அனுபவங்கள் வழியாக கூர்மையாய் உற்றுக் கவனித்து, தன்னளவில் முடிந்தமட்டிற்கும் நேர்மையாகச் சொல்லி இருக்கிறார் பாலு. மீமனிதனாக தன்னை பாவித்துக்கொண்டு அல்லாடுகிற ஒருத்தனின் கதையாகவும் இது விரிகிறது.
தன்னை அலைக்கழித்த எவற்றில் இருந்தும் தப்பித்து இந்த நாவலின் நாயகன் தொற்றிக்கொண்டு மீண்ட கயிறு, விளையாட்டு என்பது. உடலையும் மனதையும் ஒரே நேர்கோட்டில் வைத்திருக்கிற தியானமென்கிற விளையாட்டைப் பற்றிக் கொண்ட எவரையும் பரந்த அந்த மைதானம் கைவிட்டதே இல்லை.
இந்த நாவலில் ஒரு வசனம் வரும். “முதல் முறை தொடுகையில் ஆர்வம் வருகிறது என்றால், மகத்துவம் வாத்தியத்தில் இருக்கிறது. ஆயிரமாவது முறை தொடும் போதும் அதுவே வருகிறதென்றால் மகத்துவம் உன்னிடம் இருக்கிறது” என. முதல்முறை ஆர்வத்தோடு இலக்கியம் என்கிற வாத்தியத்தைத் தொட்டு இருக்கிறார் பாலு. ஆயிரமாவது முறை தொடும்போதும் அது அவருள் நீடிக்கட்டும் என அந்தப் பேருண்மையிடம் உள்ளபடியே இறைஞ்சுகிறேன்.
சொனாட்டா, சிதறுண்ட தலைமுறையின் கண்ணாடிப் பாத்திரம்.
- சரவணன் சந்திரன்