Description
கார்த்திகைப் பாண்டியனின் சிறுகதைகள் வடிவரீதியிலும் கதைமொழியிலும் புதிதாக இருக்கின்றன. தனிமையால் பீடிக்கப்பட்டவர்களே அவரது நாயகர்கள். குற்றவுணர்வே அவர்களை வழிநடத்துகிறது. எல்லாக் கதைகளிலும் குற்றத்தின் சுழல்விளக்கு தனது செந்நிறத்தைப் படரவிடுகிறது. நினைவுகளை எழுப்பும் நிகழ்வுகளையும் நினைவாக மாறும் நிகழ்வுகளையும் கொண்ட இந்த எட்டுக்கதைகள் புனைவின் புதிய சாத்தியங்களை உருவாக்குகின்றன. கார்த்திகைப் பாண்டியனுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.