Description
இந்தியாவில் இருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தான் இரண்டாகப் பிரிந்து பங்காதேஷ் (வங்க தேசம்) உருவானது. இந்த கிழக்கு பாகிஸ்தான் பிரிவினை இந்தியாவின் பார்வையில் மிக முக்கியமானது. இந்தியாவின் அன்றைய அரசியல் சூழல் எப்படி பாகிஸ்தானை அச்சுறுத்தியது, பங்களாதேஷ் உருவாக்கத்தில் இந்தியாவின் பங்கு என்ன, பாகிஸ்தான் எப்படி இந்தியாவை எதிர்கொண்டது போன்ற வரலாறுகள், இந்தியாவின் நோக்கில் தமிழில் விரிவாகப் பதிவு செய்யப்படவில்லை என்ற குறையை இந்தப் புத்தகம் நீக்குகிறது. இந்தப் புத்தகத்தில் கிழக்கு பாகிஸ்தான் பிரிவினையைச் சொல்லும் அதே நேரத்தில், இந்திய பாகிஸ்தான் அரசியல் சூழல், வங்காளத்தின் தனித்துவமான கலாசாரப் பின்னணி மற்றும் வரலாறு ஆகியவற்றையும் விரிவாகவும் ஆய்வுபூர்வமாகவும் அலசி இருக்கிறார் விதூஷ். தமிழ்ப் புத்தக வரலாற்றில் கிழக்கு பாகிஸ்தான் பிரிவினையைப் பற்றி இத்தனை ஆழமான, விரிவான நூல் வந்ததில்லை.