Description
சுபாஷ் சந்திர போஸ் மரணமடைந்து ஏறக்குறைய 75 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையிலும், இன்றுவரை அவரது மரணத்தில் இருக்கும் மர்மம் விவாதிக்கப்படுகிறது. கடந்த ஏழு பத்தாண்டுகளில், ஒருவரின் மரணத்தைப் பற்றிய உண்மையைக் கண்டறிய மொத்தம் மூன்று கமிஷன்கள் அமைக்கப்பட்டது சுபாஷுக்கு மட்டுமே. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சுபாஷ் சந்திர போஸின் பங்கு, அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றது, இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு உலகளாவிய கவனத்தைக் கொண்டு வர அவர் மேற்கொண்ட முயற்சிகள், சுபாஷின் சாகசங்கள் என அனைத்தையும் விரிவாக எழுதி இருக்கிறார் சக்திவேல் ராஜகுமார். சுபாஷ் சந்திர போஸ் மரணம் குறித்த மர்மங்களையும், விசாரணை கமிஷன்களின் அறிக்கைகளையும் பற்றிப் பேசும் இந்தப் புத்தகம், சுபாஷ் சந்திர போஸ் குறித்த ஒரு முழுமையான பார்வையைத் தருகிறது.