Description
சத்ரபதி சிவாஜி - மாபெரும் மொகலாய சாம்ராஜ்யத்தைத் துணிந்து எதிர்த்து நின்றவர். அராஜகப் போக்குடன் ஆட்சி செய்து அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய ஔரங்க சீப்பை, நியாயமான வழியில் எதிர்கொண்டு மிரள வைத்த ஒரே இந்திய வீரர். சிவாஜியின் வாழ்க்கை பல சாகசங்கள் நிறைந்தது. ஐம்பது வயது வரை மட்டுமே வாழ்ந்த இந்த மாவீரனின் வாழ்க்கையைச் சுவாரஸ்யமாகச் சொல்லிச் செல்கிறார் அனந்தசாய்ராம் ரங்கராஜன். ஒட்டுமொத்த பாரத தேசத்தின் புனிதத்தையும், அதன் நெடிய பாரம்பரியத்தையும் காத்து, இன்றைய இந்தியாவின் சமூக, கலாசார, ஆன்மிக, அரசியல் போக்குகளைத் தீர்மானித்த ஓர் உண்மைத் தலைவனின் உன்னத வரலாறே இந்தப் புத்தகம். சிவாஜி பற்றிய ஆதாரமற்ற மிதமிஞ்சிய புகழுரைகளைத் தவிர்த்துவிட்டு, தரவுகளுடன் எளிய தமிழில் இந்த நூல் எழுதப்பட்டிருப்பது இதன் சிறப்பு.