Description
செண்பகராமன் என்று அழைக்கப்படும் செண்பகராமன் பிள்ளை இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற வீரர். இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து, ஹிட்லர் மற்றும் கெய்சரின் உதவியைப் பெற்று ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் படை திரட்டி போர் புரியப் பாடுபட்டவர். இந்தியாவிற்கு வெளியே இருந்துகொண்டே பிரிட்டிஷாரை பாரத மண்ணிலிருந்து வெளியேற்றப் பாடுபட்டவர். இந்திய தேசியத் தொண்டர் படையை உருவாக்கியவர். ‘எம்டன்’ நீர்மூழ்கிக் கப்பலில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றியவர். ஜெய்ஹிந்த் என்னும் முழக்கத்தை வழங்கியவர்.
செண்பகராமனின் வாழ்க்கை வரலாற்றை உணர்வுபூர்வமாக எழுதி இருக்கிறார் ரகமி. பல்வேறு ஆதாரங்களைத் திரட்டி, செண்பகராமனின் உறவினர்களையும் நண்பர்களையும் நேரில் சந்தித்துப் பேசி, இந்தப் புத்தகத்தை விரிவாகவும் ஆதாரத்துடனும் உருவாக்கி இருக்கிறார். 1990ல் எழுதப்பட்ட இந்த நூல் இன்றளவும் பொக்கிஷமாகத் திகழ்கிறது.