Description
லிபியா என்ற பெயர் வரலாற்றில் பிரபலமானதற்கு முக்கியக் காரணம், அதன் சர்வாதிகாரியாகப் பல ஆண்டுகள் ஆட்சி செய்த ‘முஅம்மர் கடாஃபி’. இவரது ஆரம்ப ஆட்சிக் காலத்தில் லிபியா பெரும் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கண்டது. அந்நாள்களில் இவர் லிபிய மக்களின் மீட்பராகப் பார்க்கப்பட்டார். ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல, மீட்பராகக் காணப்பட்ட இதே கடாஃபி பின்னாட்களில் கொடுங்கோலராகவும் சர்வாதிகாரியாகவும் உருமாறினார். மன்னராக இருந்த அதே லிபியாவில் அனாதைப் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். கடாஃபிக்கு ஏன் இந்த முடிவு நேர்ந்தது என்பதையும், இந்தக் காலமாற்றத்தில் நிகழ்ந்த வரலாற்றையும் இந்தப் புத்தகம் தெளிவாக எடுத்துரைக்கிறது. கடாஃபியின் எழுச்சியையும் வீழ்ச்சியையும், அதன் பின்னால் உள்ள உலக அரசியலையும் எளிமையாக எழுதி இருக்கிறார் ப.சரவணன்.