Description
இன்றைய ஓவியக்கலை பல நவீன தொழில்நுட்பங்களுடனும் வசதிகளுடனும் உலகெங்கும் பரவியுள்ளது.
• இந்த ஓவியக்கலை தொடக்கத்தில் எப்படி வளர்ந்தது?
• இதன் வளர்ச்சிக்குப் பங்களித்தவர்கள் யாவர்?
• ஓவியக்கலையில் மேற்குலகம் எந்த வகையில் தாக்கம் செலுத்தியது?
இவையெல்லாம் பலரும் அறியாதது. இத்தகைய ஓவிய வரலாற்றை, ஓவியர்களை, அவர்களது இணையற்ற படைப்புகளை உங்கள் கண்முன் கொண்டுவந்து காட்சிப் படுத்துகிறது இந்தப் புத்தகம்.
உலக ஓவியங்களை அறிமுகப்படுத்தி, ஓவியக்கலையில் பெண்களின் பங்கு, பெண்ணியம் பேசும் படைப்புகள், மனம் பிறழ்ந்தவர்களின் படைப்புகள், விளிம்புநிலை மக்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவரின் படைப்புகள் என அனைத்தையும் குறித்து இந்த நூல் விரிவாகப் பேசுகிறது.
ஓவியங்கள் குறித்த விரிவான புத்தகங்கள் தமிழில் அரிது. இந்தப் புத்தகம் ஓவிய ஆர்வலர்களுக்கும், கலை ஆர்வலர்களுக்கும் பல புதிய தகவல்களை வழங்கும்.