Description
இந்தியாவின் தபால்தலைகளில் பல சாதனையாளர்களின் முகங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் யார் இவர்கள், இவர்கள் ஏன் தபால்தலைகளில் இடம்பெற்றார்கள் என்று யோசித்திருக்க மாட்டோம். தபால்தலை சாதனையாளர்களின் வாழ்க்கைக் குறிப்பைச் சுருக்கமாகப் பதிவு செய்யும் புத்தகம் இது. எத்தனையோ வீரர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று, எத்தனையோ வழிகளில் பங்களித்து, நம் பாரத மண்ணைக் காக்க எப்படியெல்லாம் போராடினார்கள் என்பதை இந்தப் புத்தகம் உணர்த்தும். ஒரு தபால்தலைக்குப் பின்னால் இத்தனை வரலாறா என்று ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார் நூலாசிரியர் காமராஜ் மணி.