Description
• ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெற்று தனது லட்சியத்தை அடைய அறிவாற்றல் மட்டும் போதுமா?
• ஐ. க்யு. அதிகம் பெற்று, படிப்பில் தங்கப் பதக்கங்களை வாங்கிக் குவித்த பலர், தங்களது தொழில் வாழ்க்கையிலும் சொந்த வாழ்க்கையிலும் சவால்களை எதிர்கொள்ள முடியாமல் திணறி, தற்கொலை வரைக்கும் சென்றுவிடுவது ஏன்?
• உணர்ச்சிகளின் பின்னணி என்ன? மனிதனை ஆட்டிப்படைக்கும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி நம் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவர முடியுமா?
• எமோஷனல் இண்டெலிஜென்ஸ் என்றால் என்ன? உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கும் எமோஷனல் இண்டெலிஜென்ஸுக்கும் என்ன தொடர்பு?
• சொந்த வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் எமோஷனல் இண்டெலிஜென்ஸைப் பயன்படுத்தி வெற்றி காண்பது எப்படி?
இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்கிறது இந்தப் புத்தகம்.
எமோஷனல் இண்டெலிஜென்ஸ் குறித்த அனைத்தையும் எளிமையான தமிழில் பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி இருக்கிறார் ஜி.எஸ்.சிவகுமார்.