Description
ரகமியின் இயற்பெயர் டி.வி.ரங்கசாமி. பத்திரிகைத் துறையில் பழுத்த அனுபவம் உடையவர். ‘சுதேசமித்திரன்’ நாளிதழில் பணியாற்றியவர். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபாடு கொண்ட ரகமி எழுதிய வரலாற்று நூல்கள் மிகவும் புகழ்பெற்றவை. ஆதாரபூர்வமானவை. காலத்தால் அழியாதவை. வாஞ்சிநாதனின் வரலாற்றைச் சொல்லும் இந்த நூலை ரகமி 1984ல் எழுதினார். வாஞ்சிநாதனின் வீரம் மிகுந்த வாழ்க்கையையும், அவரது தியாகத்தையும், அவரது குடும்பத்தினர் பட்ட கஷ்டங்களையும் காவிய நடையில் விவரிக்கும் இந்தப் புத்தகம் ஒரு பொக்கிஷம்.