Description
உணவும் உடல்நலமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. ‘சுவையான உணவுகள் உடல்நலத்துக்கு ஏற்றதல்ல’ என்ற பொதுவான கருத்து ஒன்று உண்டு. இந்தப் புத்தகம் அந்தக் கருத்தை மாற்றும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது. சூப்கள், காலை மற்றும் மதிய சாத வகைகள், குழம்பு வகைகள், துவையல் வகைகள், சிறுதானிய உணவுகள், சுண்டல் வகைகள், நோயெதிர்ப்புப் பானங்கள், இனிப்பில்லா இனிப்புகள், இயற்கைப் பானங்கள் போன்ற பலவிதமான உணவுகளுக்கான செய்முறைகளை இந்தப் புத்தகம் அளிக்கிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பும் இந்த உணவு வகைகளை நாம் வீட்டிலேயே சுலபமாகத் தயார் செய்யலாம். இந்தப் புத்தகம் சுவையான, ஆரோக்கியமான சமையலைச் செய்ய உதவும் ஒரு கையேடு.
ஊட்டச்சத்தியல் ஆலோசகரான யோகாம்பாள் திருநாவுக்கரசு, உடற்பருமன் மற்றும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பிரத்தியேகமான உணவுப் பொருட்களை விற்பனை செய்து வரும் ‘Paleobay’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.