Description
• மகாராஜா ஹரி சிங் எதன் அடிப்படையில் இந்தியாவுடன் காஷ்மிரை இணைக்க ஒப்புக்கொண்டார்?
• ஆர்ட்டிகிள் 370 என்பது என்ன?
• காஷ்மிருக்கு ஏன் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது?
• காஷ்மிருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நிரந்தரமானதா? அதைப் பின்வாங்கிக் கொள்வது காஷ்மிருக்கு இழைக்கப்படும் துரோகமா?
• இந்தியாவின் காஷ்மிர் தனியாக ஒரு நாடு போல் இயங்க ஆர்டிகிள் 370 அனுமதித்ததா?
• ஜவாஹர்லால் நேரு, ஷேக் அப்துல்லா காலம் தொடங்கி, இந்திய அரசியல் வரலாற்றில் காஷ்மிரின் சிறப்பு அந்தஸ்து குறித்து நடந்த விவாதங்கள் என்ன?
அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்கிறது இந்தப் புத்தகம். பல்வேறு தரவுகளுடன், தொடக்கம் முதல் இறுதி வரை எங்கும் விலகிச் செல்லாமல், இந்தப் புத்தகத்தைக் கோர்வையாக, திறம்பட எழுதி இருக்கிறார் ஆர்.ராதாகிருஷ்ணன்..