Description
இது சேமிப்புகள் மற்றும் முதலீடுகளின் காலம். வங்கிச் சேமிப்பு, பங்குச்சந்தை முதலீடு, தங்கம் போன்ற பலதரப்பட்ட சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளோம். அவ்வகையில் ஒரு புதிய வழிதான் ‘கிரிப்டோ கரன்சி.’
கிரிப்டோ கரன்சியைப் பற்றிய ஒரு முழுமையான அறிமுகத்தைத் தருகிறது இந்த நூல்.
• கிரிப்டோ கரன்சி என்றால் என்ன?
• இதில் சேமிப்போ, முதலீடோ செய்வது எப்படி?
• இதில் உள்ள லாபம் நஷ்டம் என்ன?
• பிட்காயின் என்றால் என்ன?
• நாம் இதில் எப்படியெல்லாம் ஏமாற்றப்படலாம்?
• கிரிப்டோ கரன்சியில் எச்சரிக்கையாக இருப்பது எப்படி?
இப்படி அனைத்தையும் தெளிவாகவும் விளக்கப் படத்துடனும் கூறுகிறது இந்தப் புத்தகம்.
நிதித்துறையில் பல ஆண்டு அனுபவம் உள்ள நா.கோபால கிருஷ்ணன், கிரிப்டோ கரன்சி குறித்த முழுமையான தகவல்களை உங்கள் முன் வைக்கிறார். இந்தப் புத்தகம், சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கான உங்கள் அறிவை மேம்படுத்தும்.