சுந்தர் பிச்சை


Author: G. S. சிவகுமார்

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 190.00

Description

கூகிள் - இன்றைய நமது வலதுகை. ஆண்டிராய்ட், கூகிள் தேடல், குரோம் ப்ரவுசர், ஜிமெயில், கூகிள் மேப்ஸ், யூ டியூப் போன்றவை இல்லாவிட்டால் நம் வாழ்க்கை ஸ்தம்பித்து விடும் என்ற நிலைமைக்கு நாம் வந்துவிட்டோம். கூகிள் எனும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், இந்தச் செயலிகளின் உருவாக்கத்திற்கும் பின்னணியில் உள்ளவர் சுந்தர் பிச்சை என்னும் ஓர் இந்தியர், அதிலும் தமிழர். இந்தப் புத்தகம் சுந்தர் பிச்சையின் பள்ளி வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை, மேற்படிப்பு, கூகிள் நிறுவனத்தில் சாதாரண நிலையிலிருந்து உயர்பதவிக்கு உயர்ந்தது வரையிலான பயணத்தை விவரிக்கிறது. இந்தப் பயணத்தில் அவர் சந்தித்த இடர்ப்பாடுகள், சோதனைகள், சவால்கள், வெற்றிகள், சாதனைகள் போன்றவற்றைத் தெளிவாகவும் சுவையாகவும் ஜி.எஸ்.சிவகுமார் எழுதியுள்ளார். இளைய தலைமுறையினருக்கு முன்னுதாரணமாகத் திகழும் சுந்தர் பிச்சையின் வாழ்க்கை, அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாக அமையும்.

You may also like

Recently viewed