Description
காலம்தோறும் இந்திய கலாசாரத்தில் உடலுறவு தொடர்பான விஷயங்களில் கூச்சத்தோடும் தயக்கத்தோடுமே அணுகப்பட்டு வருகிறது. தம்பதியருக் கிடையே ஏற்படும் சண்டை சச்சரவுகளுக்கு பெரும்பாலும் தாம்பத்தியத்தில் இருக்கும் பிரச்னைகளே காரணமாக இருக்கும். கணவன் மனைவிக்குள் தாம்பயம் பற்றிய புரிதலில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். அப்படியிருந்தால் அவர்களுக்குள் எந்தப் பிரச்னையும் எழாது.‘மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்செவ்வி தலைப்படு வார்.' எனும் குறள் காமத்தின் முக்கியத்துவத்தை ‘காமம் மலரை விட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே' என்று விளக்குகிறது. அப்படிப்பட்ட காமம் பற்றிய அனைத்து விஷயங்களையும் அலசிப் பார்த்து அது தொடர்பான சந்தேகங்களைப் போக்குகிறது இந்த காமத்துக்கு மரியாதை நூல்.விகடன் இணைய தளத்தில் 100 அத்தியாயங்களுக்கு மேல் வெளியானவற்றில் 50 அத்தியாயங்களின் தொகுப்பு நூல் இது. பாலியல் தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்கு பாலியர் மருத்துவர்கள், மன நல மருத்துவர்கள் இதில் அளித்த விளக்கங்கள், ஆலோசனைகள் நிச்சயம் காமம் பற்றிய புரிதலை வாசர்களுக்கு ஏற்படுத்தும்.