Description
இன்றைய அவசர வாழ்க்கையில் உணவுகளிலும் உண்ணும் முறைகளிலும் மாற்றங்கள் வந்துவிட்டன. அதனால் பல நோய்கள் பாதிக்கின்றன. முக்கியமாக உடல் பருமன். அதிகாலையில் பூங்காக்களிலும் சாலை ஓரங்களிலும் நடைப்பயிற்சி மேற்கொள்வோர் பெரும்பாலும் உடல் பருமன் கொண்டவர்களாகவே இருப்பதைப் பார்க்கலாம். உடல் பருமனால், விரும்பிய உடையை அணிய முடியாமல்போவது, வேகமாக நடக்கும்போதும் மாடிப்படிகளில் ஏறி, இறங்கும்போதும் மூச்சிரைப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. உயரத்துக்கு, வயதுக்கு ஏற்ற எடையைப் பராமரித்து வந்தால் எந்தப் பிரச்னையும் ஏற்படாமல் ஆரோக்கியமாக வாழலாம். உடல் எடையைத் தக்கவைப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கி அவள் விகடனில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இது. உணவு உண்ணும் முறை, எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் என எளிமையான வழிகளில் எடையைக் குறைப்பதற்கான அத்தனை தீர்வுகளையும் விளக்கமாகப் பேசும் தொகுப்பு இது. உடல் எடையைப் பராமரித்து உற்சாக உடல்நலத்தைப் பெற வழிகாட்டும் நூல் இது!