பணத்தோட்டம்


Author: அறிஞர் அண்ணா

Pages: 80

Year: 2023

Price:
Sale priceRs. 100.00

Description

அவன் (தமிழன்) வீரனாய், விவேகியாய், வணிகனாய் மரக்கலம் செலுத்தி ரோம் வரை தமிழகத்தின் கீர்த்தியை பரப்பிய பண்பு மிகுந்திருந்த சிறப்பு. அவை இலக்கிய வகுப்புக்கு மட்டுமே இன்று பயன்படுகிற நிலை இருக்கிறது. மக்கள் மன்றத்திலே கூட இந்நிலை பற்றிக் கூறுவார் இல்லை. வரலாற்றிலும் (ஷேக்ஸ்பியரின்) இலக்கியத்திலும் இடம்பெற்ற இலாவண்ய கிளியோபாட்ராவின் காதணி மட்டுமல்ல, ரோம் நாட்டரசி லோலா என்பவளும், வேறு வேந்தர் பலரும் அவர்தம் வேல்விழி மாதரும் விரும்பி, கேட்ட விலை கொடுத்துப் பெற்றனர் தமிழகம் அனுப்பிய முத்துக்களை. எகிப்து நாட்டுக்கு மட்டும் ஆண்டுதோறும் 120 கப்பல்கள் செல்லுமாம் தமிழ்நாட்டுப் பண்டங்களை ஏற்றிக்கொண்டு. கடல் வாணிபம் அவ்வளவு ஓங்கி வளர்ந்தது. ரோம் நாடு பத்து லட்சம் பவுன் பெறுமானமுள்ள தங்க நாணயங்களை இந்திய உபகண்டத்துக்கு அனுப்பி வந்தது வியாபாரத் தொடர்பின் காரணமாக. இதிலே மிகப் பெரும் பகுதி தமிழ்நாட்டுக்கு வந்தது. இவை மச்சபுராணமோ மகாலிங்க புராணமோ அல்ல, வரலாறு. அத்தகைய தமிழகம் இன்று வடநாட்டுக்கு மார்க்கட்டாகி விட்டது. வறண்டு வருகிறது. வகையற்றோரின் இடமாகிவிட்டது. மார்வாரி, குஜராத் முதலாளிமார்களின் வேட்டைக்காடாகி விட்டது. இவ்வளவும் 'தேசீயத் திரை'யினால் மறைக்கப்படுகிறது. - அறிஞர் அண்ணா

You may also like

Recently viewed