பற்றுக்கோடு


Author: கலாப்ரியா

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 150.00

Description

தமிழ் இலக்கியத்தில் சிறுகதைக்கு தனித்த வரவேற்பு உண்டு. சிறுகதை என்பது சுருக்கமான, கதை கூறும் புனைவுவகை உரைநடை இலக்கியமாகும். தமிழ் வார இதழ்கள் அனைத்தும் சிறுகதைகளை வெளியிட்டு வருகின்றன. அந்த அளவுக்கு தமிழ் வாசகர்களிடம் சிறுகதைகளுக்கு வரவேற்பு உள்ளது. பாரதியார், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன்... என சிறுகதை எழுதாத தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் இல்லை. இதில் எழுத்தாளர் கலாப்ரியாவின் சிறுகதைகளுக்கென்று தனி வாசகர் வட்டம் உண்டு. கலாப்ரியா எழுதி பல்வேறு தமிழ் இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு நூல் இது. இதில் உள்ள சிறுகதைகளில் வரும் கதாபாத்திரங்கள் நாம் வாழ்க்கையில் எங்கோ, எப்படியோ சந்தித்த மனிதர்களாக இருக்கின்றனர். நெல்லை வட்டார மனிதர்கள், நவீன நாகரிக மனிதர்கள் என பல்வேறு தரப்பட்ட மனிதர்கள் இந்தச் சிறுகதைகளில் வலம் வருகிறார்கள். எல்லா சிறுகதைகளின் முடிவும் படிப்பவர் மனதில் பதிந்துவிடும் அளவுக்கு கலாப்ரியா இந்தச் சிறுகதைகளைப் புனைந்திருக்கிறார். இந்தப் பத்து சிறுகதைகளில் பல்வேறு வகையான மனிதர்களைக் காணலாம்.

You may also like

Recently viewed