அகாசியா மலர்கள்


Author: மலர்விழி

Pages: 0

Year: 2023

Price:
Sale priceRs. 150.00

Description

நவீன உலகில் புலப்பெயர்வு, பாலினம் சார்ந்த உளவியல் பிரச்சினைப்பாடுகள், இருத்தல் சார்ந்த அடையாளச் சிக்கல்கள் ,போருக்கு பிறகான தனிமை,மெய்நிகர் வாழ்வு, மனஅழுத்தம், புதிய விழுமியங்கள் முதலான கருப்பொருட்களை ஆழமாகப் பேசும் கவிதைகளைத் தேர்ந்து,நேர்த்தி குன்றாமல் மொழி பெயர்ப்பு செய்திருக்கிறார் மலர்விழி. அசலுக்கு நெருக்கமான உணர்வை அதன் தொனி மாறாமல் சமயங்களில் இசைமைக்கு அணுக்கமாக கடத்த முடிந்து விட்டால் ஒரு மூலப்படைப்புக்கு நியாயம் செய்து விட்டதாக நம்பலாம். ஆசியர் தனது எத்தனங்களில் துல்லியம் என்ற அலகுக்கு சற்றேறக் குறைய அல்லது ஓரளவு பயணப்பட்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. புத்தாயிரத்தின் கவிதை வெளியைப் புரிந்து கொள்ள இத்தொகை நூல் ஒரு சிறிய திறப்பை ஏற்படுத்தக் கூடும் என்று நம்புகிறேன் மொழிபெயர்ப்புக் கவிதைகளின் சவால் வினைச் சொற்கள் மற்றும் பெயர்ச் சொற்கள் மொழிதோறும் அமரும் பாங்கு. இந்த தொகுப்பில் ஒரு சொல்லுக்கு இணைச் சொல்லாகவும் ,பதிலியாகவும், அர்த்த அணுக்கங்களுடனும் கவிதைகளின் வடிவ மற்றும் உத்திகளுக்கேற்ப ஆசிரியர் மொழி பெயர்த்திருக்கிறார் எனக் கருதுகிறேன். இருமொழித் தேர்ச்சியுடன் கவிதைகளை மொழிபெயர்க்கக் கவிஞராய் இருப்பதும் ஒரு கூடுதல் அல்லது அவசியமான தகுதி என்று நம்புகிறேன். - நேசமித்ரன்

You may also like

Recently viewed