கணை ஏவு காலம்


Author: பா. ராகவன்

Pages: 0

Year: 2023

Price:
Sale priceRs. 230.00

Description

உலகின் எங்கோ ஒரு மூலையில் யுத்தம் ஒன்று வெடித்தால் அதில் யார் பக்கம் நியாயம் என்று அமைதிப் பூங்காவில் சாவகாசமாக உட்கார்ந்தபடி நம்மில் சிலர் விவாதித்துக் கொண்டிருக்கையில் அங்கு யுத்த பூமியில் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் பலி கொடுக்கப்படுகின்றனர். நடப்பது என்னவென்று நாம் சுதாரித்துக் கொள்ளுமுன் மேலும் பல உயிர்கள் பறிபோகிறது.  
ஆனாலும் எதனால் தொடங்கியது, இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை விளங்கிக் கொண்டால் மட்டுமே போர் நிறுத்தமும் சாத்தியப்படும். அவ்வாறு அண்மையில் நம்மை உலுக்கியெடுக்கும் இஸ்ரேல்-பாலஸ்தீன போர் குறித்துப் பேசியாக வேண்டும். அங்கு என்ன நடக்கிறது, எதனால் ஒவ்வொரு நாளும் மனிதர்கள் வாழும் நிலத்தை மண்டை ஓடுகளின் மைதானமாக மாற்றும் ஏவுகணைகள் ஏவப்படுகின்றன என்பது விவரிக்கப்பட வேண்டும். அந்த விளக்கம் பாதிக்கப்பட்டவர் தரப்பு குரலாக ஓங்கி ஒலிக்க வேண்டும். 

You may also like

Recently viewed