Description
ஃபலஸ்தீன் குறித்து தமிழில் வெளியான பல புத்தகங்களுடன் இந்த நூலை ஒப்பிடுகையில் கருப்பு வெள்ளையாக நேர் எதிராக இந்த நூல் இருப்பதைப் பார்க்கலாம். ஃபலஸ்தீன் வரலாறு குறித்த மிகச் சிறந்த புத்தகமாக இதைப் பார்க்கிறேன்.
– மனுஷ்யபுத்திரன்
ஃபலஸ்தீன் குறித்து விரிவாக அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கான பல திறப்புகளை, தொடர் செயல்பாட்டிற்கான புள்ளிகளை இந்த நூல் வழங்குகிறது. வரலாற்றை ஆழமாக வாசிக்க விரும்புபவர்களுக்கு இந்த நூல் பெரிதும் துணைபுரியும். பாடத்திட்டத்தில் வைக்குமளவுக்கு எளிமையின் உச்சத்தில் நின்று மிக எளிய கட்டுரைகளாக அமீன் இந்த நூலை எழுதியுள்ளார்.
– அ. முத்துக்கிருஷ்ணன்