Description
“வாளால் இஸ்லாம் பரப்பப்பட்டது என்ற தவறான கூற்றுக்குத் தக்க பதிலடியாக ஆசிரியரின் இந்த வரலாற்றுப் படப்பிடிப்பு அமைந்திருக்கிறது. வெற்றி கொள்ளப்பட்ட நாடுகள் முஸ்லிம் நாடுகளாக ஆகிவிட்டன என்ற ஒரு கற்பனையில் இவ்வளவு காலம் வரலாறு எழுதப்பட்டு வந்தது என்பதே உண்மை. இரு நூறு ஆண்டுகள் முஸ்லிம்கள் நடத்திய நல்லாட்சியைக் கண்டு சுவைத்து அனுபவித்து உள்ளத்தாலும் உயர்வாலும் அங்கீகரித்த பின்னரே அந்த நாட்டு மக்கள் தங்களை இஸ்லாமிய வாழ்வியலில் இணைந்து கொண்டனர் என்பதை இதுவரை யாரும் தெளிவுபடுத்தாத ஓர் உண்மை யாகும். நூலாசிரியருக்கு வரலாற்று அறிஞர் உலகம் பல பாராட்டுகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறது.”