Description
AI எனும் இரு எழுத்துகள்தான் உலகின் இன்றைய ட்ரெண்டிங். ‘சாட்ஜிபிடி' எனும் ஒற்றை செயலி நிகழ்த்தும் தொழில்நுட்ப மாயங்கள் ஆச்சர்யத்தின் அடுத்த கட்டம். ஆனால் அதையும் கடந்து மனித அறிவை விஞ்சி சிந்திக்கும் சூப்பர் இன்டெலிஜென்சை யார் முதலில் உருவாக்குவது என திகில் கிளப்பும் ஒரு புதிய போட்டி வேறு துவங்கியுள்ளது. நம் பூமிக்கு வந்த இந்த புதிய படைப்பு யார்? AI எனும் இந்த அசுர சிந்தனை அறிவியலைப் புரட்டிப் போடுமா, காலப் பயணத்தை சாத்தியப்படுமா, இவன் நண்பனா, எதிரியா? எப்படி உருவாகிறான், நம் விருப்பங்களை எப்படி செயல்படுத்துகிறான்? இவனது எதிர்காலம் என்ன? என்ற பல புதிர்களை விளக்குவது மட்டுமன்றி, AI எனும் செயற்கை நுண்ணறிவு குறித்த ஒரு முழுமையான புரிதலையும் இப்புத்தகம் உங்களுக்குத் தரும்.
வாருங்கள்! புதியன கற்போம்.