Description
இந்நூல் தலைமைத்துவம் பற்றிய சமகாலக் கொள்கைகளை விளக்குவதுடன் திருக்குர்ஆன், நபிவரலாற்றோடு அவற்றை ஒப்பிட்டு இஸ்லாமிய வழிகாட்டுதலின் தனித்தன்மையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இந்நூலில் விவாதிக்கப்படும் விசயங்களில் ஒன்று, தலைவருக்கும் மேலாளருக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கி இருப்பது.
அத்துடன், ‘தலைமைத்துவம் என்பது பிறப்பில் மட்டுமே வரும்’ எனும் ஆதிக்கக் கருத்தாக்கத்தை இஸ்லாமிய வரலாற்றின் ஒளியில் மறுத்துரைத்து, பயிற்சியின் மூலமும் தகுதியுள்ளவர்கள் தலைவர்களாகப் பரிணமிக்கலாம் என இது நம்பிக்கையூட்டுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, தனிநபர் ஒழுக்கத்தை தலைமைத்துவத்தின் மிக முக்கிய அம்சமாக முன்னிறுத்தி, பிற தலைமைத்துவக் கோட்பாடுகளிலிருந்து இஸ்லாமியத் தலைமைத்துவக் கோட்பாட்டை தனிச்சிறப்பு மிக்கதாக ஒளிரச் செய்கிறது.
இஸ்லாமிய அடிப்படையில் தலைமைத்துவம் பற்றிய பார்வையை வழங்கும் புத்தகங்கள் மிகமிக அரிதாகவே கிடைக்கும் தமிழ்ச் சூழலில் இந்தப் புத்தகம் ஒரு முன்னோடியாக இருக்கும். இஸ்லாமிய உணர்வு கொண்ட இளைஞர்களுக்கு தலைமைத்துவ வழிகாட்டுவதன் மூலம் இஸ்லாத்தின் இலட்சியத்தை அடைவதற்கு இந்தப் புத்தகம் உதவியாக இருக்கும்.