Description
நிலவியல் எல்லைக்குள் தங்காத பொதுத்தன்மை இவ்வனைத்துக் கதைகளுக்கும் உண்டு. காதல், காமம், கழிவிரக்கம், கயமை என மாறா மனத்தளைகள் யாவும் கதைகளாய்த் திரண்டுள்ளன.
கிறித்துவச் சமூக வெளிப்பாடும் அதன் கலாச்சார நுண்மைகளும் நிறைவாகப் பதிந்துள்ள புனைவுகள், குழந்தைகளின் உலகை எவ்விதப் பூசுதலுமின்றி உள்ளபடி பேசுகின்றன.
சிறுவத்தின் ஆறா நினைவுகளே இக்கதைகளிள் மைய நீரோட்டமாய் உள்ளதால் தேர்ந்த வாசிப்பில் நாவலாகவும் இத்தொகுப்பைப் பிணைத்து வாசிக்க முடியும்.