நாகை மாலியின் கூரிய, தர்க்கரீதியான பார்வையில் இந்திய அரசியலின் சமகால அவலங்கள் தோலுரிக்கப்படுகின்றன. இவருடைய சட்டமன்ற தொகுதியான கீழ்வேளூர் எல்லைக்குள் கீழ் வெண்மணியில் 55 ஆண்டுகளுக்கு முன் நடந்த கோர நிகழ்வு மனம் பதை பதைக்க வைக்கும் கட்டுரைகளின் வடிவம் கொள்கிறது.