Description
சொந்தமாக சிறுவர் கதைகள் எழுதுவதை விட, உலக சிறுவர் கதைகளையும், உலக நாட்டுப்புறக் கதைகளையும் தமிழில் சிறார்களுக்குத் தரவேண்டும் என்பதே எனது முக்கிய நோக்கம். நாட்டுப்புறக் கதைகள் அந்தந்த நாட்டின் கலாச்சாரம், வாழ்வியல், இன – மொழி அடையாளங்கள், வரலாறு, காலப் பதிவு முதலான பல்வேறு கூறுகளையும் உள்ளடக்கியிருப்பவை. சிறார்கள் அவற்றை அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். சிறு வயதிலேயே அவை அவர்களுக்கு ஊட்டப்படுவதன் மூலம் அவர்கள் உலக அறிவும், மானுட உணர்வும் கொண்டவர்களாக வளர்வார்கள். சிறுவர்களுக்கான பொதுக் கதைகளில் இந்த அம்சங்கள் இருக்காது அல்லது மிகக் குறைவாகவே இருக்கும். பல்வேறு உலக நாடுகளின் சிறந்த நாட்டுப்புறக் கதைகளை சிறார்களுக்குத் தருவதன் மூலம் அவர்கள் பல வகைக் கலாச்சாரங்களையும் அறிந்துகொள்ள வாய்க்கும். மேலும், அதன் பல வகைச் சுவைகளையும் ரசித்து ருசிக்கலாம். இதற்காகவே உலக நாட்டுப்புறக் கதைகளில் கூடுதல் கவனம் செலுத்தினேன்.