Description
தமிழில் உள்ள மயங்கொலி எழுத்துக்கள் சொற்களில் எப்படி வருகின்றன என்ற பூவிதழ் உமேஷின் இந்த ஆய்வு புதிய இலக்கணம் ஒன்றை உருவாக்குகிறது. அதை அவர் சொல்லும் விதம், கைக்கொள்ளும் பொருள்கள், தகவல்கள் எல்லாம் இதற்கு முன்பு எழுதப்பட்ட மொழி சார்ந்த எல்லா நூல்களிலிருந்தும் மாறுபட்டு தனித்துவமாக இருக்கின்றன. ஒற்றுமிகும் இடங்களை அறிய இவர் தரும் கற்றல் முறை புதுமையாக இருக்கிறது. மொழியைக் கவித்துவத்தோடு அணுகும் கவிஞனாக இருப்பதால் இவற்றை அழகியல் பூர்வமான ஒரு பொருளாக மாற்றும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது, இலக்கணம் சார்ந்த நூலை இப்படியும் எழுத முடியுமா என்று நம்மை வியக்க வைக்கிறார். எழுத்தாளர் பூவிதழ் உமேஷின் எழுத்தெனப்படுவது என்னும் இந்நூல் தமிழுக்கு வாய்த்த பெருமைகளில் ஒன்றாக மாறக்கூடும் என்பதை காலம் உணர்த்தும் என்று நான் நம்புகிறேன்.
- மௌனன் யாத்ரிகா