Description
இந்திய வரலாறு, பண்பாடு, இந்திய மக்கள் தங்கள் வேர்களுடன் இன்னும் இணைந்திருக்கும் விதம் ஆகியவற்றால் உலகெங்கிலும் உள்ள மக்கள் ஈர்க்கப்படுகிறார்கள். இந்த நூல் பண்பாடு, சமயம், ஆட்சிமுறை, சமூகப் பரிணாமம், பாரம்பரியம், மொழிகள், தத்துவம், அறிவியல் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான இந்திய வரலாற்றைப் பேசுகிறது.
அத்துடன் ஹரப்பா நாகரிகமும் குடியேற்றமும் நிகழ்ந்த காலம் முதல் ஆரிய ஆக்கிரமிப்புக் கோட்பாடு வரையிலான இந்தியாவின் கடந்தகால உன்னத நிலையை வெளிப்படுத்துகிறது. இதற்காகச் சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து தொடங்கி ஹரப்பா, மொஹஞ்ச-தாரோ பற்றிய விரிவான தகவல்களுடன், இந்தியாவின் வளமான பண்பாட்டு மரபை வெளிச்சமிட்டுத் தொடக்கக்காலக் கட்டங்களை இந்தப் புத்தகம் ஆய்வு செய்கிறது. மேலும் இந்திய வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களையும் சகாப்தங்களையும் விரிவான பனுவல் ஆதாரத்துடன் கண்டடைகிறது; கதை வடிவிலான, எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய விவரிப்பு, வாசகரை ஈடுபாட்டுடன் வைக்கிறது. ஏராளமான ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் வழியாக ஹரப்பா காலத்திலிருந்தும் ஆரியர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த காலத்திலும் பின்பற்றப்பட்ட இந்துமதத்தின் பரிணாம வளர்ச்சியையும் நூலாசிரியர்
இந்த நூலில் விளக்கியுள்ளார்.
***
இந்திய வரலாறு, பண்பாடு பற்றிய சுவையான உண்மைகளை அறிய விரும்புவோருக்கு இந்தப் புத்தகத்தில் ஏறக்குறைய அனைத்தும் உள்ளன—பண்டைய படையெடுப்புகளின் தடயங்கள் முதல் நவீனகாலப் பரிணாமம் வரை வாசகர்கள் மகிழ்ச்சியுறுவதற்கும் ஏன் அறிவைப் பெறுவதற்கும்கூட உதவுகிறது.
***
மூன்றாவது ஆங்கிலப் பதிப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் இந்த நுட்பமிகு புதிய பதிப்பில், ஏராளமான படங்களும் நூலாசிரியர் தம் வாழ்நாளில் இறுதியாகச் செய்த சேர்ப்புகளும் பாஷமின் மாணவரான பேராசிரியர் தாமஸ் ஆர். டிரௌட்மனின் முன்னுரையும் இடம்பெறுகின்றன.