Description
விவசாயிகள், மீனவர்கள், இடையர்கள், உப்பளத் தொழிலாளர்கள் என உழைக்கும் அடித்தட்டு மக்களின் வாழ்வியலைத் தன் படைப்புவெளியில் தொடர்ந்து பதிவு செய்துவரும் எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வியின் பதிமூன்று சிறுகதைகளடங்கிய தொகுப்பு. இன்றைய சமூகம் கொஞ்சங் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கும் அசலான கிராமங்களும் எளிய மனிதர்களும் இக்கதைகளில் பக்கம் பக்கமாக உலாவுகின்றனர். எதையும் சகித்துக்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் எதிர்கொள்ளவும் இக்கதைமாந்தர்கள் ஒப்புக் கொடுக்கிறார்கள். இக்கதைகளுக்கூடே வரும் நாட்டார் வழக்காற்றியல் கதைகளும் ஆவணப்படுத்தப்பட வேண்டிய தேவையுடையவை.