Description
குழந்தைகள் எப்போதுமே பாடல்களை விரும்புபவர்கள். . .
குழந்தைகள் மகிழ்ச்சியாக பாட வேண்டும் . கருத்து சொல்லாதீர்கள், கனத்தை ஏற்றாதீர்கள். எளிமையாக எழுதுங்கள் என்று பேராசிரியர் மாடசாமி செய்த அறிவுரை என்னை வழிநடத்தியது. .
எனது பெற்றோர் முத்து காமாட்சி இணையர் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள். குருங்குளம் எனது அழகிய கிராமம். இந்தப் பின்னணியில் எனது மனதில் பதிந்த மகிழ்ச்சியான குழந்தைப் பருவமே எனது பாடல்களுக்கு உள்ளீடாக இருக்கிறது . ஒவ்வொரு பாடலையும் காட்சியாக ரசித்தே எழுதுகிறேன். பாடலைப் படிக்கும் போது அதே காட்சி குழந்தைகள் கண் முன்னே விரியும் என்றே நம்புகிறேன்.
பாரமாக அழுத்தும் பாடச் சுமை நீங்கி குழந்தைகள் மகிழ்ச்சியாக வலம் வர வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கு எனது பாடல்கள் சிறிதளவேணும் உதவினால் மகிழ்ச்சி.