பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்


Author: கீதா இளங்கோவன்

Pages: 0

Year: 2023

Price:
Sale priceRs. 150.00

Description

பாலினச் சமத்துவத்தைப் பெண்களின் பிரச்னையாகவோ, ஆண்களுக்கு எதிரானதாகவோ பார்ப்பது ஒரு குறுகிய பார்வை. பெண்களுக்காக பெண்ணால் எழுதப்பட்டது என்பதைத் தாண்டி, ஆண் - பெண் உறவுச் சிக்கல்களைப் பற்றிப் புரிந்துகொள்வதற்காக ஒவ்வோர் ஆணும் இந்த நூலைப் படிக்க வேண்டும். வெறும் பிள்ளை பெறும் எந்திரங்களாக மட்டுமே நடத்தப்படாமல், கல்வியும் வாய்ப்புகளும் உறுதி செய்யப்பட்டதால் கடந்த மூன்று நான்கு தலைமுறைகளில் குடும்ப வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் பெண்கள் ஆற்றி இருக்கும் பங்கை நினைத்துப் பார்த்தால், பாலின சமத்துவத்தால் ஆண்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் புரியும்; செல்ல வேண்டிய திசையைப் பற்றிய தெளிவு பிறக்கும். அந்த வகையில் ஆண், பெண், மாற்றுப் பாலினத்தவர் என்ற பாகுபாடுகளைக் கடந்து எல்லோரும் படிக்க வேண்டிய கருத்துகளை சுருக்கமான, தெளிவான, நட்பார்ந்த நடையில் சொல்லும் நூல் இது.

You may also like

Recently viewed