Description
ராஜேஷ் வைரபாண்டியனின் கதைகள் மனித மனதின் ஆழத்தில் அலைவுறும் விசித்திரங்களைச் சித்திரமாகத் தீட்டக்கூடிய தன்மையுடையவை. இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பன்னிரண்டு கதைகளும் வெவ்வேறு களங்களை திருகலற்ற மொழியாலும், நுண்ணிய சித்தரிப்பாலும் வாசிப்பின்பத்தை அதிகப்படுத்தும் கதைகளாக அமைந்திருப்பதே இதன் பலம் எனலாம். கிராமத்து வாழ்வை அதன் ஈரமும் கருணையும் குறையாமல் எழுதும் ராஜேஷ் வைரபாண்டியன், நகரத்தின் இருளடர்ந்த பக்கங்களை அதன் வலியுடனும் மிகையற்ற யதார்த்தத்துடனும் எழுதிச் செல்கிறார்.