நிதி சேமிப்பு முதலீடு வரி


Author: சோம வள்ளியப்பன்

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 220.00

Description

ஏழை பணக்காரன், ஆண் பெண், சிறியவர் பெரியவர் வேறுபாடு இன்றி, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று, பணம். சம்பாதிக்கும் வழி மட்டுமல்ல. எப்படி செலவு செய்யலாம், எப்படி செய்யக்கூடாது, மீதம் செய்யும் வழிகள் என்ன, சேமித்ததை எதில் முதலீடு செய்யலாம் ? என்று பணத்தைப் பற்றி தெரிந்து கொள்ள எவ்வளவோ இருக்கிறது. தவிர, வருமான வரி, தேச பொருளாதாரம், சர்வதேச காரணங்களால் நாட்டில் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள், தங்கம், கச்சா எண்ணெய் என பணம் குறித்து அறிந்து கொள்ள வேண்டியவை ஏராளம். பணம் குறித்து தொடர்ந்து பல ஆண்டுகளாக பயிற்சி வகுப்புகள் நடத்துபவரும், அள்ள அள்ள பணம் பணம் சில ரகசியங்கள் போன்ற 15 புத்தகங்கள் எழுதியிருப்பவருமான , சோம வள்ளியப்பன் மக்களின் பணம் குறித்த சந்தேகங்களுக்கு சொல்லி இருக்கும் பதில்களின் தொகுப்பே இந்தப் புத்தகம். புரிந்து கொள்ள எளிதாக, படிக்க சுவாரசியமாக மட்டுமல்லாமல், மிகவும் பயனுள்ளதொரு புத்தகம் சோம வள்ளியப்பனின் நிதி, சேமிப்பு, முதலீடு, வரி : கேள்வி பதில்கள் புத்தகம்.

You may also like

Recently viewed