Description
‘இந்தப் புவிக்கு உந்தன் பெயரிடுவேன்’, யதார்த்தமான காதல் கவிதைகள் இல்லை. நிலையின்மையை மையமாகக் கொண்டவையும் இல்லை. மிக அதிகமான காதலுடனோ அல்லது காதலின் போதாமையைச் சுட்டியோ எழுந்திருக்கின்றன. காதலித்தலின் களைப்பை உதறுவதற்குத் தலைப்பட்டிருக்கின்றன. சில சமயங்களில் மிகை காதல் உணர்வையும் கைகளில் நிறைந்து வழியும் மொழியின் நுட்ப ஆழத்தையும் நம்பியே உருவாகியிருக்கின்றன. இலட்சியக்காதல் உணர்வுடன் ஒற்றைக் கயிற்றின் மீது நடக்கும் லாவகம் அவசியப்பட்டதை ஒவ்வொரு சொல்லின் வழியாகவும் கோரியவை.