Description
சாருவின் இந்தப் பேட்டியில் பேசுகிறவற்றில் கவனிக்கத்தக்க ஒன்றாக நான் கருதுவது ‘அவர் நான் மக்களுக்காக எழுதவில்லை. மக்களுக்கு எதிராக எழுதுகிறேன்’ என்பது. மக்கள் திரளின் சடத்தன்மைக்கு எதிராக எழுதுவது. நாஞ்சில் நாடன் ‘சொரணை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கக் கூடும். இந்தச் சொரணையை உசுப்பும் வேலையை சாரு தொடர்ந்து செய்துவந்திருக்கிறார். அதன் ஒரு அதிகாரப் பூர்வமான ஆவணமாக குதிரையின் வாயிலிருந்தே அது கடந்து வந்த தூரத்தை அளக்கும் நல்லதொரு முயற்சியாக இந்த நீண்ட பேட்டி இருக்கிறது.
- போகன் சங்கர் முன்னுரையிலிருந்து..