Description
எலே பங்காளி!
ஒரு மந்தையை உருவாக்கி
மேய்ச்சல்காரனாக இருந்திருக்கலாம்,
நிலங்களை உடமையாக்கிக்கொண்டு
ஒரு குடியானவனாக இருந்திருக்கலாம்,
இப்படி
ஒரு வேட்டை நாயின் பின்னே
காட்டில் அலைந்துழல்கிறோமே
என்று வருந்துகிறாயா?
காட்டைச் சார்ந்திருக்கும் வாழ்வு
தலைமுறைக்கும் தொடர்வதை எண்ணி
விசனப்படுகிறாயா?
காட்டுக்கும் நமக்குமான வழித்தடம்
அழிந்துவிடுமோ என்று அஞ்சுகிறாயா?