Description
இரண்டுவகைக் கதைகளை உள்ளடக்கியது இந்தத் தொகுப்பு. முதல் வகையை பெண்நிலைக் கதைகள் என்று கூறலாம். தனிப்பெண்ணாக அல்ல, பெண் என்ற வகைமையின் வெவ்வேறு நிலைகளுக்குள் புகுந்து அந்நிலையை ஆழமாக ஆராய முனையும் கதைகள். அந்த வகையில் பெண்ணெழுத்தின் அடுத்தக்கட்ட நகர்வு.
'தூசி', 'அழைப்பு' போன்ற இரண்டாம் வகைக் கதைகள் தங்கள் செயற்களத்தைக் கண்டடைந்த இலட்சிய மனிதர்களைப் பற்றியவை. இன்றைய காலகட்டத்துக்கான மதிப்பீடுகளை முன்வைப்பவை.
- எழுத்தாளர் சுசித்ரா