Description
மட்டக்களப்பு வாவியின் ஆழத்திலிருந்து எழும்பும் அதிசயமான ஒலிகளைத் தேடி நிலவொளியும் அம்மாவும் வாவியில் பயணம் செய்கின்றனர்.
சிறுமி நிலவொளி ஆர்வத்துடன் கதை கேட்க, அம்மா உலகம் முழுவதுமுள்ள மீன்மாதர் பற்றிய பற்பல கதைகளைச் சொல்கிறார். லக்ஸம்பர்கை சேர்ந்த இராஜ மீன்மாது மெலுசீனிலிருந்து மேற்காசியாவின் ஜல்நார் வரை. வடிவம் மாற்றும் திறன் கொண்ட ஒட்டாவா தேசத்தை சேர்ந்த மெனானா தொடக்கம் அனுமனை காதலித்த, இராவணனின் மகளான மீன்மாதரின் இளவரசி சுவர்ணமச்சா வரை – எல்லா கதைகளும் மிகவும் அழகானவை.
மீன் மாதரின் பாடலை போலவே இந்த அழகான ஓவியங்கள் அடங்கிய சித்திர புத்தகமும் இளம் வாசகர்களின் மனதைக் கவரும்.