Description
உலக வரைபடத்தில் சீனாவின் நீல விளிம்பையொட்டிய உத்தேசமான ஒரு புள்ளியில் வாழும், 'டாங்கா' எனும் மீனவப் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆ கீயையும் இனவரைவியல் கூறுகளின் ஊடாக அவனுடைய வாழ்வையும் நேர்த்தியான மொழிநடையில் வரைந்து காட்டும் புனைவாக்கம் இது. கதையின் இயங்குநிலத்தையும் மாந்தர்களையும் சற்றே திரித்து இந்தியப்படுத்தினாலுமே கூட அதன் ஈரத்தை அப்படியே ஏற்று உள்வாங்க முடியும் என்ற விதத்தில், இக்குறும்புதினத்தின் மையச்சரடு எத்தனை வலிமையானது என்று வரையறுக்கமுடியும். நூறாண்டுகள் கடந்து வாழும் 'பச்சை ஆமை' யொன்று படிமமாக இக்கதையில் ஆளப்பட்டிருக்கிறது. அதுதான் கதையின் தலைப்பு எனும் பட்சத்தில், அது காரணப் பெயராகவும் தோன்ற சாத்தியங்கள் உண்டு.
- மயிலன் ஜி சின்னப்பன்