Description
சீலியா சாஞ்சஸ் பிடல் காஸ்ட்ரோவுடன் சியரா மாஸ்ட்ரோ மலைகளில் போரிட்ட கியூபாவின் முதல் கெரில்லாப் பெண் போராளி. பொலிவிய மலைகளில் சேகுவேராவின் குழுவில் இருந்து போரிட்டு மடிந்த ஒரே பெண் போராளி தான்யா. உடல் முடங்கிய நிலையிலும் தனது வலிகளையும் அரசியலையும் தனது காதலரும் ஓவியருமான தீகோ ரிவைராவுடன் இணைந்து ஓவியங்களில் கரைத்தவர் மெக்சிகோ கம்யூனிஸ்ட் போராளி பிரைடா கலோ. எட்வர்ட் வெஸ்டனுக்கு இணையாக உலகப் புகைப்படக் கலையின் உன்னதப் படைப்பாளியாகத் திகழ்ந்து அகாலத்தில் மரணமுற்ற மெக்சிக கம்யூனிஸ்ட் போராளி டினா மொடாட்டி. அதிகம் வெளியுலகை எட்டாத இந்த நான்கு இலத்தீன் அமெரிக்கப் பெண் போராளிகளின் வாழ்க்கைச் சித்திரங்கள் இந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கிறது