வாஸவேச் வரம்


Author: கிருத்திகா

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 250.00

Description

இருபது ஆண்டுகளுக்கு முன்பு ‘புகை நடுவில்' என்ற நாவலை எழுதி தமிழ் இலக்கிய உலகத்துக்கு அறிமுகமான ‘கிருத்திகா' (ஸ்ரீமதி மதுரம் பூதலிங்கம்) உளவியல் அடிப்படையில் கதை மாந்தர்களின் செயல்களை ஆராய்வது மூலம் கதை சொல்லுவதில் நிபுணர். UTOPIA என்று சொல்லப்படும் வருங்கால உத்தம உலகைச் சித்திரிக்கும் உத்தியைக் கையாள்வதில் இன்றைய அரசியல், சமுதாய நிலையின் சீர்கேடுகளை எடுத்துக்காட்டி லேசாகப் பரிகாசம் செய்வது இவருடைய நாவல்களின் சிறப்பு அம்சம். ‘சத்தியமேவ', ‘தர்ம க்ஷேத்ரே', ‘புதிய கோணங்கி' என்ற நாவல்களில் ஒரு கற்பனை ஊரையும் நாட்டையும் பற்றிய வர்ணனை, நமது நாட்டு நிலைமையை நினைவூட்டுகிறது. ‘வாஸவேச்வரம்' என்ற நாவலில் கிராம வாழ்க்கையில் காணப்படும் சச்சரவுகள், உறவுத் தொல்லைகள் முதலியவற்றை விவரித்திருக்கிறார். நமது பண்பாட்டின் அடிப்படையிலேயே இன்றைய வாழ்க்கையின் அம்சங்களை ஆராயும் கிருத்திகா, மனிதனின் உண்மை நிலையையும் முழு வடிவத்தையும் மீட்பதில் ஆர்வம் கொண்டு இலக்கியப் படைப்பில் ஈடுபட்டிருக்கிறார்.

You may also like

Recently viewed