Description
ஜெயித்தவனின் முகம் மட்டும் நம் கண்களுக்கு பூதக் கண்ணாடியாய் பிரதிபலிப்பதை நம்பி எண்ணற்ற பேர் வந்து கொண்டே இருக்கிறார்கள். இன்னும் வந்த வண்ணம் இருப்பார்கள் நூற்றில், ஆயிரத்தில் லட்சத்தில் யாரோ ஒருவரை மட்டுமே தன் இருக்கையில் அமரச் செய்து அழகு பார்க்கிறது இந்த சினிமா. அவனை மட்டுமே தமது ஆஸ்தானவனாய் எண்ணிக் கொண்டு படையெடுத்து வந்து சிலர் ஜெயிக்கிறார்கள். பலர் தோற்கிறார்கள். இங்கே ஜெயித்தவர் என்பது சினிமாவில் எங்கோ ஒரு ஓரமாய் நிற்பதையே சொல்கிறேன்.