Description
பாரதி வசந்தன், சொற்கள் மிகுந்த செட்டோடு அவைகளின் இடத்தில் ஒழுங்குற வந்து அமருமாறு எழுதும் திறமை மிக்கவர், மனிதர்களின் நல்ல அம்சங்கள்பால் அவர் நம்பிக்கை கொண்டிருக்கிறார். அந்த நம்பிக்கைகளே, அவருக்குக் கவிதையும், கதையுமாக வெளிப்படுகின்றன. தம்பலாவும் அந்த ஓர்மையில்தான் எழுதப்பட்டு வெளிவருகிறது. பாரதி வசந்தனின் எழுத்து , முயற்சிகள் உண்மைகளைச் சார்ந்து இயங்குகின்றன. ஆகவே அவை , கவனிக்கப்படவும், பேசப்படவும் செய்கின்றன. தமிழ்ச் சிறுகதை உலகில் பெரும்புகழ் பெற்று ஏராளமான பேரால் இன்று , பேசப்படும் தம்பலா தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மும்மொழிகளில் , ஒரே நூலாகத் தொகுக்கப்பட்டு வெளியாகிறது. இவ்விதம் ஒரே கதை மும்மொழித் தொகுப்பாக வருவது தமிழைப் பொறுத்தவரை இதுவே முதல் முறை. ஏற்கெனவே பற்பல விருதுகளும், பரிசுகளும் பெற்றுள்ள பாரதி வசந்தன், தற்காலத் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு பரிசாக இந்தக் கதையைத் தந்துள்ளார்.